ஈப்போ, ஜூலை.03-
கடந்த ஜுன் 24 ஆம் தேதி ஈப்போ, தாமான் தாசேக் டாமாயில் ஒரு வீட்டில் 57 வயது ஆடவர் ஒருவர் கடும் வெட்டுக் காயங்களுடன் இறந்த கிடந்த கொலை வழக்கை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் நேரடி கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
அந்த நபரின் கொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் நாட்டின் எல்லைத் தாண்டிய குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இக்கொலை வழக்கு மீதான விசாரணையை புக்கிட் அமான் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டதாக டத்தோ நோர் குறிப்பிட்டார்.
புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு ஆசியான் போலீஸ் மற்றும் ஆசியான் இண்டர்போல் போலீஸ் ஆகியவற்றின் உதவி நாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.