ஸமோரா, ஜூலை.03-
லிவர்பூல் மற்றும் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா ஸ்பெயினில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது சகோதரர் ஆண்ட்ரேவும் பலியானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
28 வயதான டியோகோ ஜோட்டா, 2020 இல் வோல்வ்ஸிலிருந்து லிவர்பூலில் சேர்ந்தார். அந்த கிளப்பிற்காக 182 போட்டிகளில் 65 கோல்களை அவர் அடித்தார். அவர் பிரீமியர் லீக் பட்டத்தையும், லிவர்பூலுடன் எப்.ஏ கிண்ணம் மற்றும் லீக் கிண்ணத்தையும், 2018 இல் வுல்வ்ஸுடன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார். மேலும் போர்ச்சுகலுடன் இரண்டு முறை யு.இ.எப்.ஏ., நேஷன்ஸ் லீக்கை வென்றுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்புதான் அவர் தனது நீண்ட காலத் தோழியான ரூட் கார்டோசோவை மணந்தார். இந்நிலையில் ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் டியோகோ ஜோட்டா பலியானார்.