ஜகார்த்தா, ஜூலை.03-
இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற பயணிகள் படகு மூழ்கியதில் நால்வர் உயிரிழந்தனர். 38 பேர் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஜாவாவில் உள்ள பன்யுவாங்கி துறைமுகத்திலிருந்து பாலி நோக்கி அந்த பயணிகள் படகு சென்று கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அவ்விபத்தில் 23 பேர் உயிர் தப்பியிருக்கின்றனர்.
இந்தக் கப்பலில் 53 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களும், 14 கனரக வாகனங்கள் உட்பட 22 வாகனங்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் மோசமான வானிலை காரணமாக கடுமையான இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.