பாலியல் பலாத்காரம், தந்தை மீது குற்றச்சாட்டு

கோல திரங்கானு, ஜூலை.03-

கடந்த ஏப்ரல் மாதம் தனது 12 வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தந்தை ஒருவர், கோல திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

நீதிபதி நஸ்லிஸா முகமட் நஸ்ரி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 34 வயதுடைய அந்த நபர், குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS