ஜோகூர் பாரு, ஜூலை.03-
ஜோகூர், இஸ்கண்டார் பிரதேசத்தில் 64 வாகனம் கழுவும் மையங்களில் ஏக காலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 147 அந்நிய நாட்டு ஆடவர்களும், மூன்று உள்ளூர் பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
சட்டவிரோதக் குடியேறிகளின் வருகை மற்றும் போதைப்பொருள் விநியோகம், ஓன்லைன் சூதாட்டம் ஆகியவற்றைத் துடைத்தொழிக்கும் நோக்கில் இந்தந் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் 21 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய 147 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.