ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது

பாங்கி, ஜூலை.03-

கல்விச் சேவை ஆணையத்துடன் இணைந்து கல்வி அமைச்சு, மேற்கொண்ட சீரமைப்புகளின் விளைவாக நாட்டில் நீண்ட காலமாக நீடித்து வந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி வரலாற்றில் இது போன்ற வெற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

இனி மலேசியாவில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான எந்தப் பிரச்சனையும் இல்லை. பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக ஃபாட்லீனா கூறினார்.

கல்வி அமைச்சு நியமிக்கும் ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும், மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று பாங்கியில் மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற 15ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS