கோலாலம்பூர், ஜூலை.03-
அரசாங்க ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டமான கோத்தா மடானி மேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.
கோத்தா மடானி வீடமைப்புத் திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்ற பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமிமி தையிப் அஸாமுடின், விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக டாக்டர் ஸாலிஹா குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அந்தத் திட்டம் அவசியம் என்று டாக்டர் ஸாலிஹா கூறினார்.
அரசு ஊழியர்களுக்கான வீடுகள் பற்றாக்குறைப் பிரச்சனையைச் சமாளிக்க இத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.