பெந்தோங், ஜூலை.03-
பகாங், பெந்தோங், கம்போங் பாருவில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்தது.
தீ மற்ற கட்டடத்திற்குப் பரவாமல் இருக்க பத்து பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீணை அணைக்கும் பணிக்கு பெந்தோங் நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான பாரந்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.