சைக்கிளோட்டப் பயிற்றுநரின் உரிமம் பறிக்கப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.03-

தன்னிடம் பயிற்சிப் பெற்ற வயது குறைந்த பெண்ணிடம் பாலியல் சேட்டைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நாட்டின் முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரர் நோர் எஃப்பெண்டி ரொஸ்லியின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளதாக மலேசிய சைக்கிளோட்ட தேசிய சம்மேளனத்தின் தலைவர் டத்தோ அமார்ஜிட் சிங் தெரிவித்தார்.

வழக்கு முடியும் வரையில் அந்த முன்னாள் தேசிய சைக்கிளோட்ட வீரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என்று டத்தோ அமார்ஜிட் சிங் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் சைக்கிளோட்டப் போட்டியில் மலேசியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தவரான நோர் எஃப்பெண்டி ரொஸ்லி, இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர்ஷீலா கமாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS