ரோம், ஜூலை.03-
இத்தாலிக்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு ரோம், சிகி அரண்மனையில் நடைபெற்றது. டத்தோஸ்ரீ அன்வாரை இத்தாலிய பிரதமர் மெலோனியிடம் அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நெறிமுறைத் தலைவர் உற்சாக வரவேற்பை நல்கினார்.
பின்னர், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. இரு நாட்டுத் தலைவர்களும் சிகி அரண்மனை முற்றத்தில் சிவப்புக் கம்பளப் பாதை வழியாக நடந்து சென்றனர்.
இருவருக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு நடந்தது. வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.