தம்முடைய அமைதி இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள்படாது

கோலாலம்பூர், ஜூலை.03-

தாம் அமைதி காத்து வருவது மூலம் மலேசியாவில் இந்திய சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைத் தாம் தீவிரமாகக் கையாளவில்லை என்று பொருள்படாது என்று பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் இன்று விளக்கம் அளித்தார்.

நீண்ட காலமாகவே தாம் அமைதியாக, திரைக்குப் பின்னால் இந்திய சமுதாயத்தின் மேன்மைக்குரிய பங்களிப்பை வழங்கி வரும் முறையைத் தேர்வு செய்து, அதற்கான பணிகளைச் செய்து வருவதாக முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா குறிப்பிட்டார்.

13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத்தை மேன்மையுறச் செய்வதற்கு 40 அம்சங்களை உள்ளடக்கிய பரிந்துரை ஒன்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நூருல் இஸ்ஸா கலந்து கொள்வதாக இருந்தது.

எனினும் நூருல் இஸ்ஸா கலந்து கொள்ள முடியாமல் போனதைத் தொடர்ந்து, அவர் அனுப்பி வைத்த செய்தியை கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ வாசித்தார்.

எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் பொதுமக்களின் கவனத்தை விட அர்த்தமுள்ள முடிவுகளுக்குத் தாம் முக்கியத்துவம் அளித்து வருவதாக நூருல் இஸ்ஸா அந்தச் செய்தியில் விளக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS