எல்ஆர்டி தண்டவாளப் பகுதிக்குள் ஆடவர் அத்துமீறி நுழைந்தார்

கோலாலம்பூர், ஜூலை.04-

இன்று காலையில் கோலாலம்பூர் மாநகரில் எல்ஆர்டி ரயில் சேவைகள் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டு இருந்த வேளையில் ஆடவர் ஒருவர், திடீரென்று தண்டவாளப் பாதைக்குள் அத்துமீறி நுழைந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிளானா ஜெயாவிற்கும், சுபாங் ஆலாமிற்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தினால், ரயில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கணினி வழி ரயில் இயக்கத்தைக் கவனித்து விட்ட ஆப்ரேட்டர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே தண்டவாளப் பாதையிலிருந்து அந்த ஆடவரை வெளியேற்றும் பணி துரித வேகத்தில் மேற்கொள்ளப்பட்டதாக எச்ஆர்டி ரயில் சேவையை வழிநடத்தி வரும் ரேபிட் ரேல் சென்டிரியான் பெட்ஹாட் நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


அதற்கு முன்னதாக, புத்ரா ஹைட்ஸிலிருந்து அலாம் மேகா ரயில் நிலையத்திற்குப் புறப்படவிருந்த எல்ஆர்டி ரயில், நிறுத்தப்பட்டு, புத்ரா ஹைட்ஸ் நிலையத்திற்கே திருப்பி விடப்பட்டது.


இதே போன்று கோம்பாக் ரயில் நிலையத்திலிருந்து அலாம் மேகாவிற்குப் புறப்படவிருந்த ரயில் கோம்பாக் நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது என்று அந்த ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS