புத்ராஜெயா, ஜூலை.04-
புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம், நேற்று பணி ஓய்வுப் பெற்றார். தற்போது அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பதவி நிரப்படும் வரை கூட்டரசு நீதிமன்ற முதிர்நிலை நீதிபதி டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், அப்பீல் நீதிமன்றத் தலைவர் பணிகளைக் கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் தலைமை நீதிபதிக்கான பொறுப்புகளை கவனித்து வரும் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹாஷிம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.