வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய தீவிரவாதக் கும்பல் வெற்றிகரமாக முறியடிப்பு: ஐஜிபி கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூலை.04-

டிஜிட்டலைத் தளமாக கொண்டு மலேசியாவில் தீவிரவாத சிந்தனையைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்ட வங்காளதேசப் பிரஜைகளை உள்ளடக்கிய தீவிரவாதக் கும்பலை அரச மலேசிய போலீஸ் படை வெற்றிகரகமாக முறியடித்துள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

அரச மலேசியப் போலீஸ் படை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் 25 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய 36 வங்களாதேசிகள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பயங்கரவாதத் துடைத்தொழிப்பு சிறப்புப் படையின் மூலம் சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்டசோதனை நடவடிக்கையில் இந்த 36 பேரும் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி தெரிவித்தார்.

அந்நிய நாட்டவர்களின் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும் துடைத்தொழிப்பதற்கு அரச மலேசியப் போலீஸ் படை கொண்டுள்ள வியூகமே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டு வரும் என்று டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS