வெற்றி மாறனுடன் இணைந்த மணிகண்டன்!

சிம்பு அடுத்ததாக STR 49,50, 51 ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படம் வட சென்னையில் நடக்கும் குண்டர் கும்பல் திரைப்படமாக உருவாகிறது. இந்நிலையில் படத்தின் அறிவிப்பு வீடியோ படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றது. இதற்காக சிம்பு புது கெட்டப்பில் காணப்படுகிறார். இப்படத்தின் கதைக்களம் வட சென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படம் எடுப்பதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததாக இதற்கு முன் தகவல் வெளிவந்து அது உண்மையில்லை என மறுத்து வெற்றிமாறன் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்நிலையில் இப்படத்தில் சிம்பு இரண்டு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஒன்று இளமை மற்றும் சிறிய முதுமை தோற்றத்திலும் நடிக்கிறார். படத்தில் குட் நைட் புகழ் மணிகண்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிகண்டன் நடிக்கும் கதாப்பாத்திரம் இப்படத்திலும் வட சென்னை 2 படத்திலும் இடம் பெறும் கதாப்பாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.

WATCH OUR LATEST NEWS