கெடா மாநில நில இலாகாவின் அனுமதியின்றி 38 டன் சிவப்பு மண் கடத்தல்

சுங்கை பட்டாணி, ஜூலை.04-

கெடா மாநில நில இலாகாவின் அனுமதியின்றி வெ 250,000.00 ஆயிரம் மதிப்புள்ள 38 டன் சிவப்பு மண் ஏற்றி சென்ற 2 லாரிகளைப் பறிமுதல் செய்திருப்பதாக வடப் பகுதி பொதுப்பணியின் தலைமை அதிகாரி எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் தெரிவித்தார்.

நேற்று மதியம் 2.30 மணிலிருந்து மாலை 4.30 மணி வரை சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் வடப் பகுதி பொதுப்பணி அதிகாரிகள் நடத்திய சோதனையில் நில இலாகாவின் அனுமதியின்றி 38 டன் எடைவுள்ள சிவப்பு மண்ணை 2 லாரிகளில் ஏற்றிச் சென்ற 2 உள்நாட்டு ஆடவர்களை அதிகாரிகள் கைது செய்ததாக எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் கூறினார்.

கைதான இரு ஆடவர்கள் 43 மற்றும் 53 வயதுடையவர்கள் ஆவர்கள். அவர்கள் லாரி ஓட்டுனராகப் பணி புரிந்து வருபவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஷாரும் தெரிவித்தார். அதோடு இந்தக் குற்றச்செயல் கெடா மாநில நில இலாகாவின் 1/2023 கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார்.

மேலும் , சிவப்பு மண் கடத்தல் குற்றம் நிருப்பிக்கப்பட்டால் குவாரி உரிமையாளரின் மொத்த முதலீடுகளும் கெடா மாநில நில இலாகாவிடம் ஒப்படைக்கப்படும் என்றார் எஸ்ஏசி ஷாரும் பின் ஆஷிம் .

WATCH OUR LATEST NEWS