நாசி லெமாக் வியாபாரி மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை.04-

தனது காதலியின் வயது குறைந்த மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக நாசி லெமாக் வியாபாரி ஒருவர் அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

61 வயது அஸ்மான் ஹாசிம் என்ற அந்த நபர், நீதிபதி நோர்ஷீலா கமாருடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், அந்த நபரின் இத்தகைய வக்கிரச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் காதலியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரும் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஆண்டு மத்தியப் பகுதியில் உலு லங்காட்டில் உள்ள தனது வீட்டில் 12 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS