ஜார்ஜ்டவுன், ஜூலை.04-
ஜார்ஜ்டவுனில் மிக அசுத்தமாகக் காணப்பட்ட 4 உணவகங்களை 14 நாட்களுக்கு மூடும்படி பினாங்கு மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சோற்றுப் பானைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இடுக்குகளில் எலிகளின் எச்சம் குவிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நான்கு உணவகங்களையும் உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலையில் மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவின் அமலாக்க அதிகாரிகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, சம்பந்தப்பட்ட 4 உணவகங்கள் அசுத்தத்தின் உறைவிடாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அது தெரிவித்துள்ளது.