கோல சிலாங்கூர், ஜூலை.04-
தனது வளர்ப்பு மகளை இடிக் கல்லால் அடித்துச் சித்ரவதை செய்து வந்ததுடன், கத்தியால் கீறி காயம் விளைவித்தக் குற்றத்திற்காக மாது ஒருவருக்கு கோல சிலாங்கூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 8 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
54 வயதுடைய அந்த மாது பிடிப்பட்ட தினமான கடந்த ஜுன் 28 ஆம் தேதி முதல் தண்டனை அமலுக்கு வருவதாக நீதிபதி நூருல் மார்டியா ரெட்ஸா உத்தரவிட்டார்.
தண்டனைக்குப் பிறகு 3 ஆண்டுகள் நன்னடத்தை ஜாமீனில் இருக்க வேண்டும் என்பதுடன் 4 மாதங்களுக்கு 40 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி நூருல் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த ஜுன் மாதம் கோல சிலாங்கூர், தாமான் பெண்டாஹாராவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது வளர்ப்பு மகளை அந்த மாது சிற்றவதைச் செய்து வந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.