கோலாலம்பூர், ஜூலை.04-
கோலாலம்பூர், ஜாலான் நக்கோடா யுசோஃப், ஒஃப் ஜாலான் கோக்ரேனில் வீற்றிருக்கும் மிகப் பெரிய உணவு வளாகமான விருந்து ஃபுட் கோர்ட் உணவு வளாகம் இன்று காலையில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் மூன்று ஸ்டால் கடைகள் அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8.15 மணிக்கு ஏற்பட்ட இந்தத் தீச்சம்பவத்தில் மொத்தம் 7 ஸ்டால் கடைகள் பாதிக்கப்பட்டன. இதில் 3 கடைகள் முற்றாக அழிந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படையின் செயலாக்க கமாண்டர் நூர் ஸலேஹா சைனால் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட எஞ்சிய ஸ்டால் கடைகள் 20 விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரே கூறையின் கீழ் பல வகையான உணவுகளைப் பரிமாறும் விருந்து ஃபுட் கோர்ட்டில் 25 க்கும் மேற்பட்ட ஸ்டால் கடைகள் செயல்பட்டன.