சீடேக்கின் ஆலோசகராக நூருல் இஸ்ஸா நியமனம்

ஷா ஆலாம், ஜூலை.04-

சிலாங்கூர் மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகத்தின் ஆலோசகராக பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

சீடேக் என்று அழைக்கப்படும் அந்தக் கழகத்தின் 10 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அதன் ஆலோசகராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தகவல் ஊடகத்தின் வாயிலாக இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கொள்கை மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்தும் சிந்தனை குழாமின் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் நூருல் இஸ்ஸாவிற்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS