பெட்டாலிங் ஜெயா, ஜூலை.04-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ஏரோடிரேன் ரயில் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
கன மழையைத் தொடர்ந்து சுரங்கப் பாதையில் உள்ள வடிக்கால் பம்புகளின் ஒன்றில் தொழிட்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், இதனால், தேங்கி நின்ற மழைத் தண்ணீரை அகற்ற முடியாமல் போனதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் பொருட்டு தேங்கி நிற்கும் தண்ணீர், கைமுறையாக அகற்றப்பட்டு, தண்டவாளங்கள் பயன்பாட்டிற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தும் வரை ஏரோடிரேன் ரயில் சேவை தற்காலிமாக நிறுத்தப்படுவதாக மலேசிய ஏர்போர்ட் பெர்ஹாட் அறிவித்துள்ளது.