விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்

தங்காக், ஜூலை.05-

தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கிரேப் ஓட்டுநரின் வாகனம் எதிரே வந்த ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் எதிரும் புதிருமாக மோதியதில் தந்தையும் மகனும் உயரிழந்தனர்.

அந்த மோட்டார் சைக்கிள் ஃபோர் வீல் டிரைவ் வாகனத்துடன் மோதிய பின்னர் தீப்பிடித்துக் கொண்டது.

இதில் 52 வயது கிரேப் ஓட்டுநரும் அவரின் மூன்று வயது மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.10 மணியளவில் ஜோகூர், தங்காக்கில் நிகழ்ந்தது.

இதில் 27 வயதுடைய ஃபோர் வீல் டிரைவ் ஓட்டுனர், சொற்பக் காயங்களுடன் உயிர் தப்பினார்.

WATCH OUR LATEST NEWS