கோலாலம்பூர், ஜூலை.05-
இவ்வாண்டில் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜுலை 3 ஆம் தேதி வரை குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக ஆயிரத்து 5 முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக அதன் தலைமை இயக்குநர் ஸகாரியா ஷாபான் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட முதலாளிகள் உணவகங்கள், தொழிற்சாலை, கடைகள் மற்றும் இதர வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.
எந்தவோர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அல்லது செல்லத்தக்க பெர்மிட்டின்றி அந்நிய நாட்டவர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டது மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது ஆகிய குற்றத்தின் பேரில் உள்ளூரைச் சேர்ந்த அந்த முதலாளிகள் கைது செய்யப்பட்டதாக ஸகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.