ஷா ஆலாம், ஜூலை.05-
தாமும், தமது மனைவியும் உறவு கொண்டது மற்றும் இதர பெண்களுடன் தாம் உறவு கொண்டிருந்த ஆபாசப் வீடியோப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக நம்பப்படும் பேச்சாளர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பேச்சாளரின் இரண்டாவது மனைவி கடந்த ஜூன் 16 ஆம் தேதி அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் இறுதியில் அந்த நபரைக் கைது செய்துள்ளது என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த ஜுலை முதல் தேதி கைது செய்யப்பட்ட அந்த பேச்சாளரின் இரண்டு கைப்பேசிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்தக் கைப்பேசியைச் சோதனையிட்டதில் அவரின் இரண்டாவது மனைவி செய்து கொண்ட போலீஸ் புகாரைப் போல, அவற்றில் ஆபாச வீடியோப் படங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.
கடந்த ஜுலை முதல் தேதியிலிருந்து போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருந்த அந்த நபர், இன்று சனிக்கிழமை போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.