பெர்சத்து, பாஸ் தொகுதிகளைப் பாரிசான் நேஷனல் கைப்பற்றும்

பத்து பஹாட், ஜூலை.05-

பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளை வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிடமிருந்து மீண்டும் கைப்பற்றுதற்கு உறுதிப் பூண்டுள்ளதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாரிசான் நேஷனல் விரிவான ஓர் ஆய்வை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவ்விரு கட்சிகளிடமும் பாரிசான் நேஷனல் இழந்த தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியும் என்று விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வின்படி தனது தொகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்கான வாய்ப்பைப் பாரிசான் நேஷனல் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

ஜோகூர், பத்து பஹாட், பாரிட் ராஜா சமூக மண்டபத்தில் ஶ்ரீ காடிங் அம்னோ டிவிஷன் கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் இதனைக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS