சுங்கை பூலோ, ஜூலை.05-
சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு வயது பெண் குழந்தை மரணமுற்றது.
உடலில் கடுங்காயங்கள், வீக்கங்களுடன் சுயநினைவின்றிய நிலையில் அந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தையின் 27 மற்றும் 28 வயதுடைய வளர்ப்புப் பெற்றோர்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவப் பரிசோதனையில் அந்த குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியில் உலர்ந்த இரத்தக் கறை இருந்ததைத் கண்டு, இது குறித்து மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், போலீசுக்குத் தகவல் தந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.
எனினும் அந்தக் குழந்தை இறந்து விட்டதைத் தொடர்ந்து அவரின் வளர்ப்புப் பெற்றோரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.