வேகக் கட்டுப்பாட்டை இழந்த லோரி எதிர்த்திசையில் நுழைந்தது

சிரம்பான், ஜூலை.05-

மலைப் பகுதியிலிருந்து இறங்கிக் கொண்டு இருந்த லோரி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பான காணொளி ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை மாலை 5.55 மணியளவில் நெகிரி செம்பிலான், செனாவாங், ஜாலான் பெர்சியாரான் ஃபோரஸ்ட் ஹைட்ஸ் 1 இல் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹட்டா சி டின், அந்த நிசான் ரக லோரியை 23 வயது நபர் செலுத்தியதாகக் குறிப்பிட்டார்.

அதிர்ஷ்டவசமாக அந்த லோரி, இதர வாகனங்களுடன் மோதவில்லை என்றாலும் மின்சாரத் தூணில் மோதி, கால்வாயில் தடம் புரண்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS