மாராங், ஜூலை.05-
வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் முன்மொழியப்பட்டுள்ளார்.
பெர்சத்து கட்சியின் திரெங்கானு, மாராங் டிவிஷன் நடத்திய தனது ஆண்டுக் கூட்டத்தில் முஹிடினைப் பிரதமராக வேட்பாளராக முன்மொழிந்துள்ளது.
இதனை டிவிஷன் தலைவர் ரஸாலி இட்ரிஸ் உறுதிப்படுத்தினார். 16 ஆவது பொதுத் தேர்தலில் முஹிடின் யாசினே பிரதமர் வேட்பாளர் என்பதற்குத் தங்கள் டிவிஷன் முழு ஆதரவை நல்குவதாக அவர் குறிப்பிட்டார்.