ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா இரத ஊர்வலம்

சிரம்பான், ஜூலை.05-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நாளை ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மாலை 6.31 மணிக்கு ஆலய நித்திய பூஜைக்கு பிறகு 5 இரதங்களை உள்ளடக்கிய பஞ்சமூர்த்திகள் இரத ஊர்வலம், மாலை 7 மணிக்கு கோவில் வாசலிருந்து தொடங்கும்.

இரதங்கள் நின்று, பக்தர்களுக்கு காட்சியளிப்பதற்கு 5 இடங்களில் இரதப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இரத ஊர்வல ஏற்பாடுகளை ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக செய்து வரும் N9 சேரிடி அமைப்பின் தலைவர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

முதலில் தாமான் துவாங்கு ஜஃபார் ஃபாசா 3, பெட்ரோன் அருகில் அமைக்கப்பட்ட ரதப் பந்தலில் இரதங்கள் நிற்கும். அதன் பின்னர் தாமான் ஶ்ரீ செனாவாங் கடை வரிசைக்கு அருகில் இரதங்கள் நிற்கும்.

பின்னர் மூன்றாவது இடமாக தாமான் துவாங்கு நஜியா யூத்/ஆர்எஸ் பிரதர்ஸ் கடை வரிசைக்கு அருகிலும், நான்காவது இடமாக ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில், தாமான் துவாங்கு நஜியாவிலும், ஆகக் கடைசியாக ஐந்தாவது இடமாக தாமான் துவாங்கு ஜஃபார், N9 சேரிடி குழு மற்றும் டிடிஜெ பிரதர்ஸ் தேர்ப் பந்தலில் இரதங்கள் நிற்கும் என்று தேவஸ்தானத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் விவரித்தார்.

அத்துடன் பஞ்சமூர்த்திகளின் இரத ஊர்வலம் நிறைவடைந்து, இரதங்கள் மீண்டும் திரும்பி, ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தை வந்தடையும் என்று லிங்கேஸ்வரன் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS