புத்ராஜெயா, ஜூலை.05-
மலேசியக் கல்வித் துணை தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட், அதன் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவிக் காலம் வரும் ஜுலை 7 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
கல்வி அமைச்சில் தொழில் நிபுணத்துவ மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்தவரான, டாக்டர் முகமட் அஸாம் கல்வித் துறையில் 35 ஆண்டு காலம் அனுபவம் பெற்றவர் ஆவார்.
மலாய்மொழியில் இளங்கலைப் பட்டம் பெற்றவரான டாக்டர் முகமட் அஸாம், மலாயாப் பல்கலைக்கழகத்தில் தொடர்பு வியூகத் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றவர் ஆவார்.