கோலாலம்பூர், ஜூலை.05-
தீவிரவாதச் சித்தாந்தத்தைப் பரப்பும் நோக்கில் மலேசியாவில் செயல்பட்ட 36 வங்காளதேசிகள் பிடிபட்ட நிலையில் அவர்களில் மூவர், தாயகத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள் தங்கள் தாயகத்தைச் சென்றடைந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த மூவர், தாயகம் வந்து சேர்ந்ததை, வங்காளதேசத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக் குழுவின் தலைவர் அக்காஸ் உடின் புய்யான் உறுதிப்படுத்தினார்.
அந்த மூவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த மூவரின் பின்னணி ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.