இசிஆர்எல் கிழக்குக் கரையோர ரயில் திட்டம் 85 விழுக்காடு பூர்த்தி

கோலாலம்பூர், ஜூலை.05-

கிளந்தான், துப்பாட்டையும், சிலாங்கூர் கோம்பாக்கையும் இணைக்கும் இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரையோர ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப் பணிகள் 85 விழுக்காடு பூர்த்தியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலாக்காவில் நேற்று தொடங்கிய மலேசியா ரேல் லிங்க் நிறுவனத்தின் 32 ஆவது இயக்குநர் வாரியக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் இதனைத் தெரிவித்தார்.

இசிஆர்எல் ரயில் சேவை, 2027 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்த ரயில் சேவையில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய ரயில் இருப்புப் பாதையில் பொறுப்பற்ற நபர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு அம்சங்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக ஷம்சூல் அஸ்ரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS