காஸாவில் போர் நிறுத்தம்- மலேசியா, பிரான்ஸ் வலியுறுத்து

பாரிஸ், ஜூலை.05-

காஸாவில் போர் நிறுத்தம் அமல் செய்யப்படுவதற்கும் பாலஸ்தீனர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கும் தங்களின் நிலைப்பாட்டை மலேசியாவும் பிரான்ஸூம் மறு உறுதிப்படுத்தியுள்ளன.

பாரிஸில் உள்ள Elysee எலிஸி மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மெக்ரோனும் இந்தக் கோரிக்கையை விடுத்தனர்.

காஸாவில் நிரந்தரப் போர் நிறுத்தம் அமல் செய்யப்பட வேண்டும் என்பதோடு பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

காஸா விவகாரத்திற்கு இரு நாட்டு தீர்வு சரியான நடவடிக்கையாக அமையும் என்று அதிபர் மெக்ரோன் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் சவூதி அரேபியா உள்ளிட்ட தரப்பினருடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தற்போதைக்கு, உதவிகள் காஸாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

WATCH OUR LATEST NEWS