பெடாஸ்-லிங்கி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குத் தடையை ஏற்படுத்திய மேலும் இருவர் கைது

ரெம்பாவ், ஜூலை.06-

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் பெடாஸ்-லிங்கி அருகே வாகனப் போக்குவரத்தைத் தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய 31 முதல் 35 வரையிலான வயதுடைய இருவர் நேற்று நள்ளிரவு ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் சரணடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது எனவும், மேலும், தலைமறைவாக இருக்கும் மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரெம்பாவ் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹசானி ஹுசேன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS