தீ விபத்துகளைத் தடுக்க புதிய சகாப்தம்: நாடு முழுவதும் 38 சமூகத் தீயணைப்புப் பயிற்சி மையங்கள்

புத்ராஜெயா, ஜூலை.06-

அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 38 புதிய சமூகத் தீயணைப்புப் பயிற்சி மையங்கள் – சிஃஎப்எல்சி அமைக்க மலேசிய தீயணைப்பு – மீட்புத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பொதுமக்களிடையே தீப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

இந்த மையங்கள் பாலர் பள்ளி மாணவர்களுக்கான ‘சிறிய தீயணைப்பு வீரர்கள் கிளப்’, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான ‘ஜூனியர் தீயணைப்புப் படை’ ஆகியத் திட்டங்களை ஆதரிக்கும். இந்த ஆண்டு எட்டு புதிய சிஃஎப்எல்சி மையங்கள் நிறுவப்படும் என்றும், இது தீயணைப்பு நிலையங்களின் பங்கை அவசரச் செயல்பாடுகளிலிருந்து சமூகப் பாதுகாப்புக்கான கற்றல் மையங்களாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS