அதிர வைக்கும் சம்பவம்: வாத்துக்களின் சத்தம் அம்பலப்படுத்திய 50 கிலோ பாம்பு

பாலிங், ஜூலை.06-

நள்ளிரவில் வாத்துக்கள் இட்ட சத்தம், வீட்டு முற்றத்தில் 50 கிலோ எடையுள்ள 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. கெடா, பாலிங், கம்போங் கெஜாயில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து தகவல் அளித்த பாலிங் தீயணைப்பு – மீட்புப் படைத் தலைவர் ஸுல்கைரி மாட் தஞ்சில், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சதப் பாம்பைப் பிடிக்க பாலீங் தீயணைப்பு – மீட்புப் படையினர் விரைந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

சுமார் 15 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, ஆக்ரோஷமாக இருந்த அந்தப் பாம்பு வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டு, வனவிலங்கு, தேசியப் பூங்காத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரமான கால நிலையும், உணவு தேடியதுமே அப்பாம்பு அதன் வாழ்விடத்திலிருந்து வெளியே வந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS