ரியோ டி ஜெனிரோ, ஜூலை.06-
மலேசிய நிறுவனங்கள் தற்போதுள்ள சந்தைகளை மட்டும் நம்பி இருக்காமல், வெளிநாடுகளில் புதிய வாய்ப்புகளைத் தேட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். பிரேசில், BRICS போன்ற தளங்கள் பெரும் வாய்ப்புகளை வழங்குவதாகவும், பிரேசில் நாட்டில் பெட்ரோனாஸ், யின்சன் புரொடக்ஷன் போன்ற மலேசிய நிறுவனங்களின் வெற்றிகளைப் பிரதமர் பாராட்டினார்.
பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவே மலேசிய நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் அன்வார் தெரிவித்தார்.