பாலியில் படகு விபத்து: மலேசியர் சிக்கியுள்ளாரா? வெளியுறவு அமைச்சு தீவிரக் கண்காணிப்பு

புத்ராஜெயா, ஜூலை.06-

இந்தோனேசியாவின் பாலி நீரிணையில் ஜூலை 4 ஆம் தேதி கவிழ்ந்த கேஎம்பி துனு பிரதாமா ஜெயா படகு விபத்து குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆரம்பக் கட்டத் தகவல்படி, விபத்தில் மலேசியர்கள் யாரும் ஈடுபடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், ஒரு மலேசியர் இந்தத் துயரச் சம்பவத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சமீபத்திய தகவலின் அடிப்படையில், ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம், இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS