அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ரியால் மாட்ரிட்

நியூ ஜெர்சி, ஜூலை.06-

ரியால் மாட்ரிட் கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று அதிகாலை பொருசியா டோர்ட்மண்டுடனான காலிறுதி ஆட்டத்தில் ரியால் 3க்கு 2 என்ற கோல் எண்ணிக்கையில் வாகை சூடியது. முற்பாதி ஆட்டத்தில் ரியால் 2 கோல்களை அடித்து முன்னணியில் இருந்தது.

பிற்பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தின் போது பொருசியா முதல் கோலைப் புகுத்தியது. அதனை அடுத்து ஆட்டத்தின் 94 ஆவது நிமிடத்தில் கிலியன் ம்பாப்பே வாயிலாக ரியால் வெற்றி கோலைப் பெற்றது. ஆட்டம் முடிவடைய சில வினாடிகளே எஞ்சியிருந்த போது பொருசியா இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை முடித்தது.

WATCH OUR LATEST NEWS