கோல பிலா, ஜூலை.06-
கோலா பிலா மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழக விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், ஒரு பல்கலைக்கழக மாணவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.40 மணியளவில் இச்சம்பவம் குறித்து துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையிலிருந்து தகவல் கிடைத்ததாக கோலா பிலா மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் முஸ்தஃபா ஹுசேன் தெரிவித்தார்.
மனநல சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாணவி, முதல் தவணை மாணவி என்றும், மாற்றுத் திறனாளி அட்டை வைத்திருப்பவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.