குவாந்தான், ஜூலை.06-
குவாந்தான் துறைமுகப் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற சீகோஸ்ட் நீர்மூழ்கிப் பயிற்சி ஒன்றின் போது, 30 வயது கமாண்டோ வீரர் காப்ரல் முகமட் ஹஸ்வன்சீர் ஜுல்நசீர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஜூலை 3 ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் பயிற்சி மேற்கொண்டிருந்த போது காணாமல் போன அவர், மறுநாள் காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து இராணுவம் உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.