புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு: சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சிறப்புக் கூட்டம்!

கிள்ளான், ஜூலை.06-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகச் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. சட்டமன்ற அமர்வின் முதல் நாள் முடிந்த பிறகு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அம்மாநில முதல்வர் அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் காவல்துறை, தொழிற்பாதுகாப்பு, சுகாதாரத் துறை உள்ளிட்ட தொழில்நுட்ப ஆய்வுக் குழுக்கள் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளன. ஏப்ரல் 1 அன்று நடந்த இந்தச் சம்பவம் குறித்து பெட்ரோனாஸ் நிறுவனத்தின் நிலத்தடி குழாயில் சதிவேலை அல்லது கவனக்குறைவு எதுவும் கண்டறியப்படவில்லை என்று கடந்த ஜூன் 30 அன்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS