ஜோகூர் பாரு, ஜூலை.06-
ஜோகூரில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, பாசீர் கூடாங் மருத்துவமனை ஆகிய மூன்று முக்கிய மருத்துவமனைகளிலும் நிலவும் சுகாதார ஊழியர் பற்றாக்குறை குறித்த பிரச்சினை அடுத்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்தப் பற்றாக்குறை மருத்துவமனைகளின் செயல்பாடுகளைப் பாதித்து, தற்போதுள்ள ஊழியர்களுக்குச் சுமையை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தை உடனடியாகத் தீர்க்கத் தேவையான முழுமையான தரவுகளையும் கோரிக்கையையும் சமர்ப்பிப்பதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் கூறினார்.