கைரி ஜமாலுடினை மீண்டும் அம்னோவுக்கு அழைக்க முயற்சி: அகமால் சாலேவுக்கு கைரி பதில்!

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ கட்சிக்குத் திரும்பி வர உதவுவதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே விடுத்த அழைப்பை பரிசீலிப்பதாக முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். அம்னோவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைவர்களான கைரி, ஹிஷாமுடின் ஹுசேன், ஷாரில் ஹம்டான் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரத் தாம் ஒரு “பாலமாக” இருக்கத் தயாராக இருப்பதாக அக்மால் சாலே தெரிவித்திருந்தார்.

அம்னோவின் தலைமைக்கு ஒற்றுமை அவசியம் என்பதையும், இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர்கள் தங்கள் ‘ஈகோவை’ கைவிட வேண்டும் என்பதையும் அக்மால் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS