கோலாலம்பூர், ஜூலை.06-
பெரிக்காதான் நேஷனல் கூட்டணியின் தலைவராகத் தொடர்ந்து நீடிக்க, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கின் ஆதரவுடன் தான் உறுதியாக இருப்பதாக முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார். பெரிக்காதான் நேஷனல் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சிக்கு வழங்க முன் வந்ததாகவும், ஆனால் அவர்கள் அதை மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார். பெர்லிஸ், கெடா, திரங்கானு ஆகிய மாநிலங்களில் பெரிக்காதான் நேஷனல் தலைமையிலான அரசாங்கங்கள் நிலையற்ற நிலையில் இருப்பதாக அம்னோ கருதுவதற்குப் பதிலளித்த முஹிடின், அம்னோவின் சொந்த உறுப்பினர்கள் பலரும் அதை நிராகரித்து விட்டதால், அம்னோவின் நிலைப்பாடு வலுவாக இல்லை என்றார்.