கோலாலம்பூர், ஜூலை.07-
மலேசிய நீதி பரிபாலனத்திற்கு மீண்டும் ஒரு பெண் தலைமையேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தலைமை நீதிபதி பொறுப்புகளைக் கவனித்து வரும் மலாயா தலைமை நீதிபதி டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட் ஹஷிம் நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்புக்கு அமர்த்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்து வருகின்றன.
டான் ஶ்ரீ ஹஸ்னா முகமட், நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவாரேயானால், நாடு, துன் தெங்கு மைமூனா துவான் மாட்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஒரு பெண் தலைமை நீதிபதியைப் பெறுகிறது என்று வகைப்படுத்தப்படும்.
இதேபோன்று காலியாகியுள்ள் இரண்டாவது உச்ச நீதிமன்றமான, அப்பீல் நீதிமன்றத்திற்கும் ஒரு பெண், தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
டத்தோ ஸாபாரியா முகமட் யூசோஃப், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்துள்ளன.