மாமன்னருக்கு அவதூறு, பெண் குற்றஞ்சாட்டப்பட்டார்

ஷா ஆலாம், ஜூலை.07-

மாமன்னருக்கு எதிராக அருவறுக்கத்தக்க உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்ததாக நம்பப்படும் பெண் ஒருவர், ஷா ஆலாம், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

39 வயது சுஹைலா அப்துல் ஹாலிம் என்ற அந்த மாது நீதிபதி நோராஸ்லின் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

6 பிள்ளைகளுக்குத் தாயான அந்த மாது கடந்த ஜனவரி 5 ஆம் தேதி, பெட்டாலிங் மாவட்டத்திற்கு உட்பட்ட சுங்கை பூலோவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் அந்த மாது தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS