முகமட் அஸாம் நியமனம் பொருத்தமானத் தேர்வாகும்

கோலாலம்பூர், ஜூலை.07-

புதிய கல்வித் தலைமை இயக்குநராக டாக்டர் முகமட் அஸாம் அஹ்மாட் நியமிக்கப்பட்டு இருப்பது பொருத்தமானத் தேர்வாகும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வர்ணித்துள்ளார்.

இன்று ஜுலை 7 ஆம் தேதி முதல் கல்வித் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் முகமட் அஸாம், நாடு சிறந்த கல்வி அடைவு நிலையை நோக்கி முன்னெடுக்கப்படுவதற்குக் கல்வித் துறையில் மிகப் பெரியச் சொத்தாகக் கருதப்படும் டாக்டர் முகமட் அஸாம், முக்கியப் பங்காற்றுவார் என்று ஃபாட்லீனா நம்பிக்கை தெரிவித்தார்.

மலாக்கா, ஜாசின் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய டாக்டர் முகமட் அஸாம், மலாக்கா மாநிலக் கல்வி இயக்குநராகவும், மலேசிய ஆசிரியர் பயிற்சிக் கழகத்தில் தலைவராகவும், மலேசியக் கல்வித் துணைத் தலைமை இயக்குநராகவும் இதற்கு முன்பு பொறுப்பேற்று இருந்தார்.

கல்வி அமைச்சு நிர்ணயித்தள்ள சில வரைவுகளில் குறிப்பாக 2027 ஆம் ஆண்டு அமல்படுத்தப்படவிருக்கும் பள்ளிகளுக்கானப் புதிய புறப்பாட நடவடிக்கைக்கு டாக்டர் முகமட் அஸாம் அதீத முக்கியத்துவம் அளித்து அந்தத் திட்டத்தை வெற்றி அடையச் செய்வார் என்று தாம் மிகுந்த நம்பிக்கைக் கொண்டு இருப்பதாக ஃபாட்லீனா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS