ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை.07-

நீதித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜசெக.வைச் சேர்ந்த செபூத்தே எம்.பி. திரேசா கோக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளை நிரப்புவதில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றசாட்டுகள் மத்தியில் அது தொடர்பாக விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் காலியாக இருக்கும் நீதிப் பரிபாலனத்தின் உச்சப் பீடமான அவ்விரு முக்கியப் பதவிகளும் ஏன் நிரப்பப்படாமல் உள்ளன, அதற்கான காரணங்கள் என்ன என்று பல்வேறு ஐயங்கள் வலுத்து வரும் வேளையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இது குறித்து ஆளும் எம்.பி.க்களுக்கு விளக்கம் அளிப்பது அவசியமாகும் என்று திரேசா கோக் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS